பொது

பிள்ளைகளின் தங்குமிடத்தை உளவு பார்க்கும் தரப்பினர்; போலீஸ் விசாரணை நடத்தும்

23/10/2024 05:40 PM

புத்ராஜெயா, 23 அக்டோபர் (பெர்னாமா) --  GISB குழும நிறுவனத்தை உட்படுத்திய Op Global நடவடிக்கையில் காப்பாற்றப்பட்ட பிள்ளைகளின் தங்குமிடத்தைச் சில தரப்பினர் உளவு பார்ப்பது தொடர்பில் போலீசார் விசாரணையை நடத்துவர்.

உளவு பார்க்கப்படுவதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட அந்த தங்குமிடத்தை அடையாளம் காண்பதற்காக தங்கள் தரப்பு தகவல்களைத் திரட்டி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''பின்னர் நாங்கள் விசாரிப்போம். ஏனெனில், அவர்களுக்கு நெகிரி செம்பிலானிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டான் ஶ்ரீ ரசாருடின் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, மீட்கப்பட்ட பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இல்லத்தை சில தரப்பினர் உளவு பார்த்து வருவதாக கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)