பொது

தீபாவளியை முன்னிட்டு உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்பட வேண்டும்

23/10/2024 06:59 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) --   மற்றொரு நிலவரத்தில், இம்மாதம் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை டத்தோ ஶ்ரீ ரமணன் முன்வைத்துள்ளார்.

பொது உயர் கல்விக்கழக மாணவர்களுக்கு, 29ஆம் தேதி காலை வரை வகுப்புகள் நடத்தப்படுவதால், அது தற்போது சர்ச்சையாக எழுந்துள்ள வேளையில், அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

''என்னிடம் கேட்டால் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஏனென்றால் 29ஆம் தேதி அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் சிலர் 29ஆம் தேதி அவர்கள் வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள் மாறாக 30ஆம் தேதி செல்வார்கள். அப்படியிருக்கும் போது அவர்கள் அவசரமாக செல்ல நினைப்பார்கள். ஆக, அவர்கள் தங்களின் வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வார்கள். அது பாதுகாப்பு இல்லை. எனவே, என்னை பொருத்த வரையில் 29ஆம் தேதி வகுப்புகள் இருக்கக் கூடாது'', என்று அவர் கூறினார்.

முன்னதாகவே, இவ்விவகாரம் குறித்து பேசப்பட்டிருப்பதால், உயர்க் கல்வி அமைச்சு அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)