உலகம்

டானா சூறாவளி: மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

24/10/2024 06:09 PM

டாம்ரா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- டானா எனும் சூறாவளி தாக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஒடிசா மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சூறாவளியினால், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது.

இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கிழக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சம் பேரை தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் அவ்விரு மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இன்று மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை இரு மாநிலங்களின் தலைநகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)