பொது

ஏழு பகுதிகளில் வெப்ப வானிலை எச்சரிக்கை

24/10/2024 06:37 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று முதல் தீபகற்ப மலேசியாவில் உள்ள ஏழு பகுதிகளில் வெப்ப வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா வெளியிட்டுள்ளது. 

அவை பேராக்கில்  லாருட், மாத்தாங், கோலா கங்சார், சிலாங்கூரில் கோம்பாக், பெட்டாலிங் ஜெயா புத்ராஜெயா மற்றும் பகாங்கில் மாரான், தெமெர்லோ ஆகிய பகுதிகளாகும்.

அப்பகுதிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை அதாவது 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினசரி வானிலை குறித்த தகவல்களை அறிந்த கொள்ள
https://www.met.gov.my/iklim/ status-cuaca-panas/ என்ற என்ற அகப்பக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)