பொது

T15 பிரிவு குறித்து பொருளாதார அமைச்சு ஆராயும்

28/10/2024 07:19 PM

மலாக்கா, 28 அக்டோபர் (பெர்னாமா) --   அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், நிதி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த ஒரு மாத காலக்கட்டத்தில் T15 பிரிவு குறித்து பொருளாதார அமைச்சு ஆராயும்.

முந்தையக் கொள்கையைப் போல தேசிய அடிப்படையில் அல்லாமல், இடம் மற்றும் வரையறை அடிப்படையில் மதிப்பிடப்படும் T15 பிரிவு குறித்து சரியான விளக்கத்தை அளிக்க இந்த ஆய்வு அவசியம் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

பொருளாதார அமைச்சின் மலாக்கா அரசாங்கத்துடனான, 13-ஆவது மலேசியத் திட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ரஃபிசி ரம்லி அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)