பொது

கதிரியக்கமற்ற அரிய வகை மண் சுரங்கத்திற்கான எஸ்.ஓ.பி-ஐ உருவாக்க வேண்டும்

25/10/2024 05:13 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- REE எனப்படும் கதிரியக்கமற்ற அரிய வகை மண் சுரங்கத்திற்கான செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-ஐ உருவாக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், (எஸ்.பி.ஆர்.எம்), அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

கண்காணிப்பில் பலவீனம் மற்றும் அமலாக்கம் குறித்து தெளிவான எஸ்.ஓ.பி இல்லாமை ஆகிய காரணங்களால் கதிரியக்கமற்ற அரிய வகை மண் சுரங்க நடவடிக்கைகளில் முறைகேடுகள் நிகழ்வதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

நிர்வாகத்தை மேம்படுத்தி ஊழலை துடைதொழிப்பது அவசியம் என்பதால் REE நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று அசாம் பாக்கி கூறினார்.

"எஸ்.ஓ.பி இல்லையென்றால் அனுமதியின்றி அனைவரும் சுரங்க நடவடிக்கையில் ஈடுபடலாம். இது ஒரு திருட்டுச் செயல். தவறாகப் பயன்படுத்துதல். எனவே தெளிவான எஸ்.ஓ.பி இருக்க வேண்டும் மற்றும் ஈ.ஐ.ஏ உள்ளடக்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.

வெள்ளிக்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கெடாவில் மேற்கொள்ளப்படும் கதிரியக்கமற்ற அரிய வகை மண் சுரங்க நடவடிக்கையில் நிகழ்ந்த ஊழல் மற்றும் அதிகார மீறல் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவரை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)