உலகம்

பிரிக்சில் இணைவதற்கு இந்தோனேசியா விருப்பம்

25/10/2024 07:06 PM

ஜகார்த்தா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- உலகப் பொருளாதாரத்திற்கு 35 விழுக்காடு பங்களிக்கும் பிரிக்சில் இணைவதற்கு இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பான பிரிக்சில் இணைவதன் மூலம் வளர்ந்து வரும் இந்தோனேசியாவின்  நிலையை வலுப்படுத்த முடியும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பில் இணைவதற்கு இந்தோனேசியா விண்ணப்பித்திருப்பதாக, புதிதாக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுகியொநோ கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற பிரபோவோ சுபியாந்தோ, சீனா அல்லது அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் நட்புறவைத் தொடரப் போவதாகப் பலமுறை வலியுறுத்தி வந்தார்.

பிரிக்சில் இணையும் முயற்சி பிரபோவோ அரசாங்கத்தின் முக்கிய திட்டம் என்று சுகியொநோ விளக்கினார்.

இதனால் உணவு, எரிசக்தி பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கமுடியும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)