பொது

மனநலம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சுகாதார அமைச்சு தயாராக உள்ளது

26/10/2024 05:59 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான தண்டனையில் இருந்து விடுபட அப்பிரச்சனையைக் காரணம் காட்டுவதைக் கையாள நடப்பில் உள்ள மனநலம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.

சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ள கவனமான ஆய்வு தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள, சுகாதார அமைச்சின் அமைச்சரவைக்கு முந்தையக் கூட்டத்திற்கு கொண்டுச் செல்லப்பட விருப்பதோடு, அவ்வமைச்சின் சட்ட ஆலோசகரின் கருத்துகளும் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

''இதை ஒரு சீர்கேடாக நான் கருதுகிறேன். அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாக இருக்கலாம். இந்தக் குற்றச்செயல் அல்லது அந்த அட்டையைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆராய வேண்டி உள்ளது. டத்தோ டிஜி கூறியதுபோல, எந்தவொரு முடிவையும், கருத்தையும் வெளியிடுவதற்கு முன்னர் அதை புரிந்து, அந்த வழக்கில் இன்னும் ஆழமாக ஆராய வேண்டும்,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், மாட்சிமை தங்கிய மாமன்னர் பூர்த்தி செய்து வைத்த 2024 மெகாடிரெண்ட்ஸ், மலேசிய அனைத்துலக சுகாதார மாநாட்டின் தொடக்க விழாவிற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு குறிப்பிட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உட்படுத்திய குற்றச்செயல்களில் அவர்களின் அந்தக் குறைபாடு காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சில சமயங்களில் நியாயம் கிடைக்காததற்கான சாத்தியம் குறித்து, “Pesakit mental ‘kalis’ undang-undang, bebas hukuman?” என்ற தலைப்பிலான பெர்னாமாவின் சிறப்பு செய்தியில் கூறப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)