உலகம்

திராமி சூறாவளியால் பிலிப்பைன்சில் 82 பேர் பலி

26/10/2024 06:37 PM

பதங்காஸ், 26 அக்டோபர் (பெர்னாமா) -- திராமி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் பார்வையிட்டார்.

கடந்த புதன்கிழமை, வடமேற்கு பிலிப்பைன்சில் வீசிய திராமி சூறாவளியால், கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 82 பேர் மடிந்தனர்.

பிலிப்பைன்சில் சூறாவளியால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மார்கோஸ் தெரிவித்திருக்கிறது.

அடுத்த வாரத் தொடக்கத்தில் திராமி சூறாவளி மேற்கு பிலிப்பைன்சை மீண்டும் தாக்கக்கூடும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதனால், அந்நாட்டின் மேற்கு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)