பொது

சீன சமூகத்தின் முதலீட்டு ஆலோசகராக வீ கா சியோங்; ம.சீ.ச பதவிக்குப் பாதிப்பு இல்லை

27/10/2024 05:15 PM

தெமெர்லோ , 27 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியாவில் உள்ள சீன சமூகத்தின் முதலீட்டு ஆலோசகராக டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங்கை நியமித்திருப்பதால், ம.சீ.ச-வின் தலைவராக அவரது பதவிக்கும் பெயருக்கும் பாதிப்பு ஏற்படாது.

நாட்டின் வளர்ச்சிக்காக பரஸ்பர புரிதலின் அடிப்படையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக முதலீடுகள் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் நியமிக்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ஹலால் துறையில் முதலீடு செய்ய சீனாவில் இருந்து முதலீட்டாளர்களைக் கவர்வதில் அவரின் பங்கைப் பாராட்டும் விதமாக, தமக்கும்  டாக்டர் வீ கா சியோங்கிற்கும் இப்புரிந்துணர்வு ஏற்பட்டதாக தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி விளக்கினார்.

இன்று பகாங், தெமெர்லோவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான பகாங் மாநில தேசிய முன்னணியின் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் சாஹிட் ஹமிடி அவ்வாறு கூறினார்.

இந்த நியமனத்தின் வழி, நாட்டில் ஹலால் தொழில்துறையில் முதலீட்டு செய்யக்கூடிய சீன முதலீட்டாளர்களை பட்டியலிடுவதில்  டாக்டர் வீ உட்பட இதர தரப்பினரும் தொடர் நடவடிக்கை மேற்கொள்வர் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)