பொது

BRICS-இல் இணைய ரஷ்யா, சீனா & இந்தியாவிடமிருந்து மலேசியாவிற்கு ஆதரவு

27/10/2024 06:27 PM

கோலா கங்சார், 27 அக்டோபர் (பெர்னாமா) --   BRICS அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கான மலேசியாவின் விண்ணப்பத்திற்கு, அதன் உறுப்பினர்களான ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்ததுள்ளது.

நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பில் எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபி அஹ்மாட் அலி  அதனை தெரிவித்ததாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''முதலில் பரிந்துரைக்கப்பட்ட நாடு மலேசியா. புதின் பரிந்துரைக்க, சீனா, இந்தியா, பிரேசில், எத்தியோப்பியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வலுவான மற்றும் உறுதியான ஆதரவை வழங்கின. கேள்விகள் இல்லாமல் மலேசியாவை பிரிக்ஸின் புதிய உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். இதர நாடுகள் ஒத்திவைக்கப்பட்டன'', என்று அவர் கூறினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்களுக்கு இடையிலான அமைப்பு, BRICS-இல் அதிகாரப்பூர்வமாக இணைந்த புதிய 13 நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றதாக கடந்த வியாழக்கிழமை பெர்னாமா செய்தி வெளியிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)