விளையாட்டு

ஜேக்கும் கேரனும் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு

27/10/2024 06:38 PM

வியன்னா, 27 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியா, வியன்னா பொது டென்னிஸ் போட்டி.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று, பிரிட்டனின் ஜாக் டிராப்பரும்,கரேன் கச்சனோவும் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகினர்.

இத்தாலியின் லோரென்சோ முசெட்டிவுடன் மோதிய ஜாக் டிராப்பர் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

இவ்வாட்டத்தில் 6-2 6-4 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்று, டிராப்பர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன், கரேன் கச்சனோவ் களம் கண்டார்.

இதில் 6-2 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்ற கரேன் கச்சனோ, இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டிராப்பருடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)