பொது

உபகரண துறையின் திறன்களை மேம்படுத்துதல் அவசியம்

28/10/2024 04:11 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- போக்குவரத்து அமைச்சும் உபகரணம் தொடர்பான நிறுவனங்களும், பயிற்சி மையங்கள் மூலம் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் உபகரண துறை கணிசமான மேம்பாட்டைப் பதிவு செய்யவும், பெரிய முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் இந்த முயற்சி முக்கியம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் மாற்றம் அதிவேகமாக உள்ளதோடு, திறன் மேம்பாடும் கேந்திர வளர்ச்சியும் தற்போதைய முன்னேற்றத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் மலேசியா பின்தங்கிவிடும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

"அதனால்தான் வேகமாக மாற்றம் ஏற்படுவதால் உபகரணத் துறையில் அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கேந்திரங்கள் மந்தமாக செயல்பட்டால் நாம் பின்தங்கி விடுவோம். எனவே, சுங்க நிர்வாகம் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன், சீர்ப்படுத்த வாய்ப்புள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தாலும், சில மாற்றங்களைச் செய்ததற்கு நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

செப்பாங், கே.எல்.ஐ.எ கார்கோவில் DHL எக்ஸ்பிரஸ் மலேசியாவைத் தொடக்கி விழாவில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.

உபகரண துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது என்ற எண்ணத்தை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஆற்றலை மேம்படுத்த போக்குவரத்து அமைச்சு சிறந்த வியூகத்தைக் கொண்டுள்ளதால் அதற்கு ஆதரவு வழங்குமாறு உபகரண தொழில்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அன்வார் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)