பொது

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களுக்கு இலவச டோல் சேவை

28/10/2024 03:51 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளியை முன்னிட்டு, நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு இலவச டோல் சேவையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.59 மணி வரை, அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் சேவை வழங்கப்படவிருப்பதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் மற்றும், பல்லின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்திலான மலேசிய மடானி அரசாங்கத்தின் அடிப்படை கூறுகளுக்கு ஏற்ப இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தமது அறிக்கையில் கூறினார்.

இந்த விலக்கு கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

நாட்டின் எல்லையில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (PLUS),  BSI டோல், ஜோகூரின், மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது வழி நெடுஞ்சாலை (LINKEDUA), தஞ்சோங் கூப்பாங் டோல் ஆகியவை இந்த இலவச டோல் சேவையில் உட்படுத்தப்படவில்லை.

இந்த இலவச டோல் சேவையை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து டோல் குத்தகை நிறுவனத்திற்கும் இழப்பீடு செலுத்த, அரசாங்கம் மூன்று கோடியே 80 லட்சம் ரிங்கிட் செலவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர், தங்கள் பயணத்தைச் சரியாக திட்டமிட்டுவதோடு சாலை விதிமுறைகளையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)