பொது

சட்டவிரோத குடியேறிகள் தீபாவளி பண்டிகை காலத்தில் வியாபாரம் செய்ய கூடாதென எச்சரிக்கை

27/10/2024 06:37 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) --   வெளிநாட்டினரைக் குறிப்பாக சட்டவிரோத குடியேறிகளை, தீபாவளி பண்டிகை காலத்தில் வேலை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ கூடாதென கோலாலம்பூர் மலேசிய குடிநுழைவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தப் பண்டிகை காலத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, சட்டவிரோத குடியேறிகள் உள்ளூர் மக்களின் வருமானத்தைப் பாதிக்கக்காமல் இருப்பதை உறுதி செய்ய தங்கள் தரப்பு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதன் இயக்குனர் வான் முஹமட் சவூப்பி வான் யூசோப் கூறினார்.

உள்நாட்டினருக்கும் வெளிநாட்டினருக்கும் பாதுகாப்பான இடமாக நாட்டின் தலைநகரை மாற்றும் முயற்சியில் இது போன்ற திடீர் சோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று வான் முஹமட் சவூப்பி தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டல் இந்தியா சுற்று வட்டாரத்தில் செயல்படும் 30 கடைகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகள் கீழ் மேற்கொள்ளப்படும் குற்றங்களே அதிகம் கண்டறியப்படுவதாக அவர் விளக்கினார்.

சோதனை செய்யப்பட்ட பெரும்பாலான வெளிநாட்டவர்கள், முறையான ஆவணங்களைக் கொண்டிருந்தாலும், அதனை தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)