உலகம்

லட்சக் கணக்கானோர் கலந்து கொண்ட நடிகர் விஜயின் கட்சி மாநாடு

28/10/2024 07:13 PM

விழுப்புரம், 28 அக்டோபர் (பெர்னாமா) -- தமிழ்த்திரை துறையில் புகழ்பெற்ற நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், அதன் முதல் மாநாடு நேற்று தமிழ்நாடு விழுப்புரத்தில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக போலீஸ் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, செயல்திட்டம், நோக்கம் ஆகியவற்றை தமது உரையில் விஜய் விளக்கினார்.

தமிழ்நாட்டு உரிமைகள் சார்ந்த மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையை முன்னிறுத்தி தமது கட்சி செயல்படவிருப்பதாக அவர் கூறினார்.

மத அப்படையில் பிளவுபடுத்தும் அரசியலை தாம் விரும்பவில்லை எனவும் விஜய் தமது உரையில் குறிப்பிட்டார்.

2026-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமது கட்சி வெற்றி பெறும் என்றும் இதர கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)