பொது

GISBH: சிறுவர்களை அவர்களின் பெற்றோரிடமே திருப்பித் தருவதற்கான 68 விண்ணப்பங்கள் பரிசீலனை

28/10/2024 07:33 PM

கங்கார், 28 அக்டோபர் (பெர்னாமா) --   Op Global நடவடிக்கை மூலம் GISB HOLDINGS நிறுவனத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட சிறுவர்களை, அவர்களின் பெற்றோரிடமே திருப்ப அனுப்புவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறவதற்கு 68 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

சிறுவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் விசாரணை உட்பட விரிவான பணிகளைத் தமது தரப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்..

''நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு முன்னர் முதலில் நாங்கள் விசாரணை நடத்துவோம். பாதுகாப்பு வேண்டுமானால் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்கிறோம். வெளியே அனுப்ப வேண்டுமானாலும் நீதிமன்றத்திடம் விண்ணப்பிப்போம். அதுதான் சட்ட விதி'', என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை, பெர்லீஸ் மாநில அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் நேன்சி ஷுக்ரி அவ்வாறு கூறினார்.

GISBH நிறுவனத்துடன் தொடர்பு இல்லாத போதும், செப்டம்பர் 11-ஆம் தேதி நெகிரி செம்பிலான் ராசா-வில் உள்ள தொண்டு இல்லத்தில் தங்களின் குழந்தை கைது செய்யப்பட்டதாக ஒரு தம்பதியினர் குற்றம் சாட்டியிருப்பது குறித்து நேன்சி அவ்வாறு கருத்துரைத்தார்.

இதுவரை, Op Global நடவடிக்கையில் காப்பாற்றப்பட்ட 54 குழந்தைகள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)