பொது

தீயை அணைக்கும் பணி 3 நாள்களுக்குள் நிறைவடையலாம்

28/10/2024 07:48 PM

கோத்தா பாரு, 28 அக்டோபர் (பெர்னாமா) --   கிளந்தான், கோத்தா பாரு, ஜாலான் பாடாங் தெம்பாக்கில் உள்ள பெங்காலான் செப்பா தொழில்துறை பகுதியின் மறுசுழற்சிக்கான பொருட்களைச் சேகரிக்கும் இடத்தில் தீயை அணைக்கும் பணி மூன்று நாட்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுசுழற்சி பொருட்கள் 100 விழுக்காடு எரிபொருளாக இருப்பதால், அதனை அணைப்பதற்கான நடவடிக்கை சற்று கடினமாக இருப்பதே இதற்கு காரணம் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நடவடிக்கைப் பிரிவு கொமாண்டர் ஜுகேரி ஷஃபீ கூறினார்.

மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களின் உயரம், மூன்று முதல் நான்கு மீட்டர் வரை இருப்பதோடு, இன்னும் 60 விழுக்காடு தீ அப்பகுதியில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அக்குவியலின் அடியில் இருக்கும் தீயை அணைப்பது, தீயணைப்பு வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாக, ஜுகேரி தெரிவித்தார்.

நேற்று, வெற்றிகரமாக அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மறுசுழற்சி குவியலில் உள்ள தீயை அணைக்கும் முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார்.

ரப்பர், PVC மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகள் போன்ற திடக்கழிவுப் பொருட்கள் உள்ள 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவுயுள்ளது.

சம்பந்தப்பட்ட அப்பகுதில் 80 விழுக்காடு தீக்கிரையாகி உள்ளது.

ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு நீர் கொள்கலன்களுடன் 40கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)