கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் மேம்பாட்டு செயல்முறைக்கு ஏற்ப இந்தியர்களும் வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் அனைத்து இன மக்களுக்காகவும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை வகுத்துள்ளதை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவும் பலப்படுத்தவவும் அவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக, அரசாங்கம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு(KUSKOP) மூலம், TEKUN மற்றும் BRIEF-i எனப்படும் BANK RAKYAT இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் வழி, SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம், (BRIEF-i) போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
Amanah Ikhtiar மலேசியாவின் கீழ் PENN மற்றும் SME Corp மூலம் I-BAP போன்ற பல்வேறு திட்டங்கள், ஏறக்குறைய 10 ஆயிரம் இந்திய தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை மேம்படுத்த உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது முகநூலில் பதிவேற்றிய தீபாவளி வாழ்த்து செய்தியில் ரமணன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)