பொது

டீசல் மானிய ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான தீர்மானத்திற்கு சாஹிட் ஆதரவு

29/10/2024 06:45 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- தீபகற்ப மலேசியாவின் மலாய் விரைவு பேருந்து உரிமையாளர் சங்கம் PEMBAWA முன்வைத்த விரைவு பேருந்து நடத்துனர்களுக்கான டீசல் மானிய ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான தீர்மானத்திற்கு துணை பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஆதரவு தெரிவித்தார்.

ஒவ்வொரு விரைவு பேருந்துக்கான, டீசல் மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் மாதத்திற்கு 6,000 லிட்டரில் இருந்து 10,000 லிட்டராக உயர்த்த வேண்டும் என்பதை அந்த தீர்மானம் முன் வைத்திருக்கின்றது.

பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 கோடி பயணிகளுக்குச் சேவை செய்கிறோம். கூடுதல் டீசல் ஒதுக்கீட்டைப் பெற முடியாவிட்டால், நிச்சயமாக அது கட்டணத்தை அதிகரிக்கும் என்பதை நான் உணர்கிறேன். இந்த விண்ணப்பம் பிரதமரால் பரிசீலிக்கப்படுவது நியாயமானதாகும்,'' என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

கோலாலம்பூரில், இன்று PEMBAWA-வின் 44-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்தபோது, டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

அதிகரித்து வரும் நடவடிக்கை செலவுகளின் சுமையைக் குறைப்பதோடு, பொதுமக்களின் நலன் கருதி விரைவுப் பேருந்து சேவை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய இந்த ஒதுக்கீட்டை உயர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)