பொது

சமுதாயத்தின் பாரம்பரிய கிராமங்களின் எண்ணிக்கையை கேபிகேடி அமைச்சு கண்டறிந்துள்ளது

30/10/2024 07:45 PM

புத்ராஜெயா, 30 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய கிராமங்கள் தொடர்பான விவகாரங்களைத் திட்டமிடுவதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு அதன் எண்ணிக்கையை கண்டறிந்துள்ளது.   

அந்த விவகாரங்களை இறுதி செய்வதற்கு முன்னதாக, அது குறித்த முழு தகவல்கள் நவம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

பேராக்கில் இதுவரை ஏழு இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய கிராமங்கள் கண்டறியப்பட்ட நிலையில், எஞ்சிய ஏழு கிராமங்கள், PBT-யில் அங்கீகரிக்கப்படவில்லை என்று Kor Ming விவரித்தார். 

''மாநில அரசுகளின் உண்மையான எண்ணிக்கைக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். பேராக்கில் எனக்கு தெரியும். பேராக்கில் ஏழு கிராமங்கள் உள்ளன. அவை ஏற்கனவே, எம்.எம்.கே-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏழு கிராமங்கள் PBT பகுதிக்குள் அமைந்துள்ளன. ஆனால், அவை இன்னும் இந்திய கிராமங்களாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால் நாடு முழுவதும் சுமார் 50 முதல் 70 வரை மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன்,'' என்றார் அவர்.  

இம்மாதம் அக்டோபர் 27-ஆம் தேதி, மலேசிய மடானியின் கொள்கைக்கு ஏற்ப, நலன் மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் பாரம்பரிய கிராமங்களின் நிர்வாகம் கேபிகேடி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஙா கோர் மிங் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)