பொது

கோலா கிராயில் மிதமான தீபாவளிக் கொண்டாட்டம்

31/10/2024 06:01 PM

கோலா கிராய், 31 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியர்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான கிளந்தான், கோலா கிராயில் உள்ள பாசிர் கெலாங் கிராமத்தில் வசிக்கும் சுமார் 70 இந்துக்கள் இவ்வாண்டு தீபாவளித் திருநாளை மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியோடும் வரவேற்றனர்.

ஆண்டுதோறும் காலையில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை முடித்த பின்னரே, குடும்பத்தோடு வீட்டில் ஒன்றாகக் கூடி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வதாக் கூறினார் மெங்கெபாங்  சட்டமன்றத்தின் கிராமத்து தலைவர் ஜெ.ஜெயகுமார். 
 
இன்று பாசிர் கெலாங் கிராமத்தில் உள்ள தமது இல்லத்தில் பெர்னாமா தொலைகாட்சி மேற்கொண்ட தீபாவளி சிறப்பு சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இன, மதத்திற்கு அப்பாற்பட்டு  உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்திக்கும் போது வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து, பண்பாடு மாறாது தீபாவளியை கொண்டாடுவதே இப்பெருநாளின் உண்மையான அர்த்தம் என்றும் அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)