கோலாலம்பூர், 31 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் சமூக ஊடகங்களில் நிகழும் pedophilia எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், இணைய மோசடி உட்பட குற்றவியல் அம்சங்களைத் தடுக்கும் முயற்சியாக அவற்றிற்கு உரிமம் வழங்குவதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் ஒருபோதும் நீட்டிக்காது என்றும் தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் மக்கள், குறிப்பாக சிறார்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கப் பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
''இணைய மோசடி கும்பலைப் பாதுகாக்கு மேத்தா-வின் நடவடிக்கை எனக்கு புரியவில்லை. அவர்களுக்கு உரிமம் வழங்கும்படி உத்தரவிட்டால் அதனை அவர்கள் பின்பற்ற வேண்டும்'', என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டபோது ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
META தரப்புடன் தாம் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் முகநூலில் நிகழ்ந்துவரும் pedophilia மற்றும் sexual grooming போன்ற குற்றங்களைத் தடுக்க இயலாதது குறித்தும் தாம் விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)