பொது

நாடு தழுவிய அளவில் களைக்கட்டிய தீபாவளிக் கொண்டாட்டங்கள்

31/10/2024 05:10 PM

கோலாலம்பூர் , 31 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைக் கட்டியிருந்தன.

ஜோகூர் மாநிலத்தில், ஜாலான் குவில் வடி ஹானாவில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் காலை மணி 9-க்கு தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

107 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் திருப்பணிகள் நடைபெற்று வந்தாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இச்சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஆலயத் தலைவர் ஜி.மேகநாதன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில், ஷா ஆலாம் செக்‌ஷன் 7-இல் வீற்றிருக்கும் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று காலை மணி ஏழு முதல் தீபாவளி சிறப்புப் பூஜைகள் தொடங்கின.

அதில், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கெடா, அலோர் ஸ்டாரில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் அங்குள்ள இந்துக்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

அதிலும் தெளிவான வானிலை பெருநாளின் மகிழ்ச்சியை மேலும் குதூகலப்படுத்தியது.

தீபகற்ப மலேசியாவை அடுத்திருக்கும் சரவாக் மாநிலத்தில், அதிகமான இந்துக்கள் இல்லாவிடினும், அங்கும் மிதமான முறையில், அர்த்தமுள்ளதாகவும் தீபாவளிப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)