பொது

அரசாங்கம் வழங்கியுள்ள ஒதுக்கீடுகள் இந்திய சமுதாயத்திற்கும் பயனளிக்கும்

31/10/2024 05:33 PM

கோலாலம்பூர், 31 அக்டோபர் (பெர்னாமா) --   சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் அரசாங்கம் வழங்கியுள்ள ஒதுக்கீடுகள், இந்திய சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.

இம்மாதம் பிரதமர் தாக்கல் செய்த 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான வணிகம், மனிதவளம், சமூகநலன் போன்றவற்றிக்கு13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதனை நிரூபிப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

''வணிகக் குழு பொருளாதார நிதித் திட்டம் அல்லது தெக்குன் மூலம் வழங்கப்படும் ஒதுக்கீடுகளை மறந்துவிடக் கூடாது. நமக்கு அமானா இக்தியாரும் இருக்கின்றது. முன்னதாக ஒரே இனத்திற்கு 100 விழுக்காடு வரை உதவி வழங்கியுள்ளது. ஆனால், தற்போது அதை அனைத்து மக்கள் உட்பட இந்திய சமுதாயத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளனர்'', என்று அவர் கூறினார்.

இன்று, இலக்கவியல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு அவர் அதனை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)