கோலாலம்பூர், 02 நவம்பட் (பெர்னாமா) -- நேற்று மாலை கோலாலம்பூர், ஜாலான் பசார் பஹாரு புடுவில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட மனமகிழ் மையத்தில் Op Noda சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்நடவடிக்கையில் 27 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அம்மையத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது கைது செய்யப்பட்ட வியட்நாமிம் 16 பெண்களும் சீனாவின் 11 பெண்களும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
சோதனையின் போது, அவர்களில் சிலர் மறைந்து கொள்ள முயன்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறினார்.
சோதனையின் போது தப்பித்து ஓடுவதற்கு ஏதுவாக, அந்த மனமகிழ் மையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகள் மாற்றி அமைத்திருப்பதும் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில், வளாகத்தின் பராமரிப்பாளராக நம்பப்படும் உள்ளூர் ஆடவரும் இந்தோனேசிய தொழிலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் என நம்பப்படும் 34-லிருந்து 44 வயதுக்குட்பட்ட 47 ஆண்கள் மற்றும் ஆறு பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட 24 முதல் 67 வயதுடைய அனைவரும் மேல் நடவடிக்கைக்காக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1959/63 குடிநுழைவு சட்டம், செக்ஷன் 55B, செக்ஷன் 39(b) மற்றும் செக்ஷன் 6(1)(c)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)