காஜாங், 05 நவம்பர் (பெர்னாமா) -- வீட்டுக் காவல் தண்டனை தொடர்பான புதிய சட்ட மசோதா குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவிருக்கிறார்.
அச்சட்ட மசோதா குறித்த விளக்கத்தை கொள்கை அளவில் நிறைவு செய்து வைக்கும்போது சில அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் காரணம், செயல்முறை, அளவுகோல், எத்தனை பேரை கருத்தில் கொள்ள முடியும் ஆகியவை குறித்து நான் விரிவாக விளக்கவிருக்கிறேன். அவை அனைத்தையும் (தகவலை) நான் வழங்கவிருக்கிறேன். இறுதியில் நான் அந்த விளக்கத்தை அளிப்பேன் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் தெளிவுப்படுத்துவதற்கு முன்னர் அச்சட்ட மசோதா தொடர்பான அனைத்து அம்சங்களும் ஒவ்வொன்றாக ஆராயப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அத்திட்டத்திற்கு, கடுமையான தணிக்கை செயல்முறைக்குப் பின்னர் சுமார் 20,000 கைதிகள் அடையாளம் காணப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக சைஃபுடின் இன்று, காஜாங்கில் உள்ள மலேசிய சிறை துறை தலைமையகத்தில் நடைபெற்ற உள்துறை அமைச்சுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)