பட்டவொர்த், 02 நவம்பர் (பெர்னாமா) -- அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் உதவித் தொகைகளில் ஏற்படும் கசிவுகளுக்கு மலேசியப் புள்ளியியல் துறை, DOSM வழங்கும் சரியான தகவல்கள் மற்றும் தரவுகளின் வழி தீர்வு காண வேண்டும்.
கசிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உதவித் தொகைக்கான செலவினங்களை அரசாங்கம் தொடர்ந்து அதிகரிக்கும்.
மேலும், அது குறிப்பிட்ட தரப்பினரை சென்றடையாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற மலேசியப் புள்ளியியல் துறையின் 75ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்தார்.
புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மக்களின் தரவுகளை சேகரிப்பதற்கான முயற்சிகளை மலேசியப் புள்ளியியல் துறை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)