பொது

'KASIH KANAK- KANAK திட்டம்' நாடு முழுவதிலும் ஊக்குவிக்கப்படும்

02/11/2024 07:11 PM

கூச்சிங், 02 நவம்பர் (பெர்னாமா) -- சிறுவர்களை மையப்படுத்தி நிகழும் பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சியில், சிறுவர் பாதுகாப்பு ஆலோசனைத் திட்டமான KASIH KANAK- KANAK திட்டம் நாடு முழுவதிலும் தொடர்ந்து விரிவுப்படுத்தப்படும்.

தமது அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து இவ்வாண்டு 327 பள்ளிகளில் இத்திட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி  தெரிவித்தார்.

''இத்தகைய விவகாரங்கள் (சிறுவர் பாலியல் குற்றங்கள்) நீடிக்கும் வரை நாங்கள் இத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை. சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் யாருக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட, தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் வெவ்வேறு வழிமுறையைக் கையாளுகின்றனர். குறிப்பாகத் தொழில்நுட்ப முறை அங்கு மேலோங்கியுள்ளது. எனவே, இவ்விவகாரம் குறித்து புகார் செய்பவர்களை நாங்கள் பார்க்கிறோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, இவ்வாண்டுக்கான மலேசிய சிறுவர்கள் புள்ளிவிவரப் பட்டியல் படி, 2022ஆம் ஆண்டில் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான 1,239 வழக்குகள்ஆக பதிவு செய்யப்பட்டிருந்த வேளையில்...

கடந்த ஆண்டு அது 26.5 விழுக்காடு உயர்வு கண்டு, 1,567-ஆக பதிவாகியுள்ளதை நேன்சி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)