கூச்சிங், 03 நவம்பர் (பெர்னாமா) -- சரவாக்கில், 2016 தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை தாமதமான புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் 24 திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து 13ஆவது மலேசிய திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக அவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
பெரும்பாலும் புறநகர் பகுதிகளை உட்படுத்திய அந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதற்குச் சுமார் 140 கோடி ரிங்கிட் தேவைப்படுவதாக புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இன்று சரவாக் மாநில மேம்பாட்டு திட்ட அமலாக்க விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சில புறநகர் பகுதி மற்றும் நகரங்களில் இருந்து முதன்மை சாலை மற்றும் பான் போர்னியோ நெடுஞ்சாலையில் மக்கள் எளிதாக நுழைய விரைவாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்களில் புறநகர் தொடர்பு சாலை திட்டம் ஜேபிடியும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
அம்மாநிலத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசாங்கம் எட்டு கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதன் பணிகள் இவ்வாண்டில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அஹ்மாட் சாஹிட்கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)