பாசிர் பூத்தே, 03 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கையின் முதல் நாளில் சுமார் 12 ஆயிரத்து 296 வாகனங்களைச் சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே சோதனையிட்டது.
அதில் ஆறாயிரத்து 756 மோட்டார் சைக்கிள்களும் ஐந்தாயிரத்து 540 இதர வாகனங்களும் சோதனையிடப்பட்டதாக ஜேபிஜேவின் சட்ட அமலாக்க மூத்த இயக்குநர் முஹம்மது கிஃப்லி மா ஹாசன் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் 1,003 மோட்டார் சைக்கிள் உட்பட மொத்தம் ஆயிரத்து 405 வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முஹம்மது கிஃப்லி கூறினார்.
மேலும், இவ்வாண்டு டிசம்பர் வரை இரண்டு மாதங்களுக்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் வழி 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே அதிகமான சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர், " என்று அவர் தெரிவித்தார்.
இன்று கிளாந்தன், பாசிர் புத்தேவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான SATU KAMPUNG, SATU PEMIMPIN SANTUNI MADANI எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)