பொது

GEN-AI விழாவிற்கு எம்சிஎம்சி முதன்முறையாக ஏற்பாடு

03/11/2024 07:25 PM

புக்கிட் மெர்தாஜாம், 03 நவம்பர் (பெர்னாமா) -- பல்வேறு தொடர்பு நடவடிக்கையின் வழி, இளைஞர்களுடன் நெருக்கமான உறவை உருவாக்கவும் அவர்களிடையே சமூக உணர்வை ஏற்படுத்துவதற்கும், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி முதன்முறையாக Generasi Ada Idea, GEN-A-I விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

பினாங்கு, ஜாலான் பாரு ப்ராய், கிராவிதாஸ் வாகன நிறுத்துமிடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்த இவ்விழாவிற்கு, சுமார் 10,000 பேர் வருகை புரிந்ததாக எம்.சி.எம்.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்விழா இளைஞர்களிடையே அண்மைய விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, நல்வாழ்வு அடிப்படையிலான நடவடிக்கைகளின் வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

இணைய பாதுகாப்பு, இணைய பகடிவதை மற்றும் செயற்கை நுண்ணறிவு, AI தொழில்நுட்பத்தின் மேம்பாடு உள்ளிட்ட கேள்விகளுக்கு அன்வார் பதிலளித்த, கிட்டத்தட்ட 2 மணிநேரம் இளைஞர்களுடனான உரையாடல் இவ்விழாவில் முக்கிய கவனத்தை பெற்றது.

தங்களின் தொழில்துறையை மேம்படுத்த தேசிய தகவல் பரப்பு மையம், NADI-இன் சேவையைப் பெற்ற உள்ளூர் தொழில்முனைவோரை மையப்படுத்திய NADI போன்ற பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் முகப்புகள் இந்த GEN-AI விழாவில் இடம்பெற்றது.

NADI சேவையைப் பெற்ற பிறகு கிடைக்கும் லாபம் முன்பை விட ஊக்கமளிப்பதாக சில சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

"எனவே இந்தப் பயிற்சி இணையம் வழியான சந்தைப்படுத்துதல் போன்ற தகவல்களை வழங்குகிறது. இணையம் வழியான சந்தைப்படுத்துதலுக்கு பயன்படுத்த எங்களுக்கு காணொளி மற்றும் புகைப்படங்களை சரிசெய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது ஷாப்பி ஆன்லைனிலும் டிக்டோக்கிலும் இடமுண்டு " என்று சிறுதொழில் வியாபாரியான ஃபாசில் ஆகாஷா கூறினார்.

"பல்வேறு இனங்களைச் சேர்ந்த இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதை அறிய முடிகிறது. இதற்கு முன்பு பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது இவ்வாறு விரிவுப்படுத்தியுள்ளோம். சீன, இந்திய இனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் " என்று மற்றுமொரு சிறுதொழில் வியாபாரியான அஹ்மத் நஜிப் தெரிவித்தார்.

'முதலாவது, எங்கள் தயாரிப்புகள் அனைத்து மலேசியர்களுக்காகவும் விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறோம். இரண்டாவது இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் நாடி சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான அம்சத்தையும் உள்ளடக்கி ஒரு தளத்தை வழங்குகிறது. எனவே, வணிகத்தில் எங்களுக்கு உதவ ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், " என  காட் தயாரிப்பு தொழில்துறை நிறுவனர் முஹமட் முஸம்மில் கூறினார்.

எனவே, நாடி ஏற்பாட்டிலான பயிற்சிகளில் அதிகமான இளம் தொழில்முனைவோர் இணைந்து, வணிக மேம்பாட்டிற்கான கல்வியைப் பெற்று பயனடையுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)