பொது

வெள்ளத் தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம்

05/11/2024 04:49 PM

கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் மக்களுக்கான நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இடம் மாற்றம் செய்தல், போன்ற பிரச்சனைகளால் கிழக்கு கரைகளில் RTB எனும் வெள்ளத் தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

நிலத்தை கையகப்படுத்தும் விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அந்த திட்டங்களுக்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படமால் இருப்பதற்கு ஏதுவாக அவற்றின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

''குத்தைகையாளருடன் தினசரி சந்திப்புகளை நடத்துவோம். இத்திட்டம் துரிதப்படுத்துவதையும் கண்காணிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த அவ்வப்போது சந்திப்புகளை நடத்துவோம்,'' என்றார் அவர்.

நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கு கடற்கரையில் வெள்ளத் தடுப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தையும் அதன் பாதிப்புகளையும் தீர்வு காண்பதில் அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக் கொள்ள...

இன்று மக்களையில் பெங்காலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் மர்சூக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)