கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- பெட்ரோல் உதவித் தொகையில் ஏற்படும் கசிவுகள் காரணமாக ரோன் 95 வகை பெட்ரோலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெட்ரோலின் மிகப் பெரிய விலை வேறுபாட்டின் காரணமாக அந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதி பெறாத தரப்பினரும் அதனை அனுபவிப்பதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
அண்மைய தரவுகளின் அடிப்படையில், நாட்டின் மொத்த பெட்ரோல் உற்பத்தியிலிருந்து 40 விழுக்காடுப் பெட்ரோல், குடியுரிமைப் பெறாத தரப்பு, வணிக மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை உட்படுத்தியும் பயன்படுத்தப்படுவதாக அமிர் ஹம்சா தெரிவித்தார்.
குடியுரிமை இல்லாதவர்களுக்கும், T15 பிரிவினருக்கும் உதவித் தொகைப் பெறப்பட்ட பெட்ரோல் கசிவதைக் கையாள்வதில் அரசாங்கத்தின் வழிமுறைகள்..
மற்றும் உதவித் தொகைப் பெறப்பட்ட, பி40 பிரிவினரின் ரோன் 95 பெட்ரோல் பயன்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இன்று மக்களவையில்
ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)