உத்தரகாண்டம், 05 நவம்பர் (பெர்னாமா) -- உத்திரகாண்ட் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
அல்மோரா மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையை விட்டு தடம் புரண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் மேலும் பலர் காயத்திற்கு ஆளானாதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பேருந்து கார்வாலில் இருந்து ராம்நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தின்போது பேருந்தினுள் குறைந்தது 42 பயணிகள் இருந்தனர்.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக உத்தரகாண்டின் போலீஸ் துறையின் இயக்குநர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)