பொது

17ஆவது சபா மாநிலத் தேர்தல்; எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைக்க தே.மு தயார்

05/11/2024 05:01 PM

கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைக்க தேசிய முன்னணி தயாராக உள்ளது.

சபா உட்பட மத்திய மற்றும் மாநில அளவில் கட்சிகள், குறிப்பாகதேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்த, அண்மையில் நடந்த ஒருமைப்பாட்டு அரசாங்க செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''எந்தவொரு கூட்டணியுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணிக்கு இடையிலான ஒத்துழைப்பு அடைப்படையில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கூட்டணி கட்சியின் தலைவர் என்று முறையில் பிரதமர் தெரிவித்தார்,'' என்றார் அவர்.

17-வது சபா மாநில தேர்தலில் சபா தேசிய முன்னணி தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கூறியது தொடர்பில்  சாஹிட் ஹமிடி அவ்வாறு கருத்துரைத்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)