சிறப்புச் செய்தி

500 கிலோ பூசணியைப் படகாகப் பயன்படுத்தி 70 கி.மீ. பயணித்து அமெரிக்கர் கின்னஸ் சாதனை

05/11/2024 07:18 PM

கொலம்பியா, 05 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இவர் தமது தோட்டத்தில் ராட்சத பூசணிக்காயை வளர்த்து வந்துள்ளார்.

முறையான பராமரிப்பு மற்றும் உரமிடுதல் ஆகியவற்றால் அப்பூசணிக்காய் சுமார் 500 கிலோ கிராம் எடையுடன் வளர்ந்தது.

பின்னர் அப்பூசணியின் மூலமாக ஒரு படகையும் அவர் உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து அப்படகின் மூலமாக போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை சுமார் 73 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் மேற்கொண்டுள்ளார்.

26 மணி நேரம் நீடித்த இந்த கின்னஸ் சாதனை முயற்சி சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)