கோலாலம்பூர், 06 நவம்பர் (பெர்னாமா) -- அந்நியத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமநிதி வாரியம், KWSP சந்தா அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, உள்நாட்டு ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் சமபங்கான ஊதியத்தை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
2025 வரவு செலவுத் திட்டத்தில் 2025 அறிவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான KWSP பங்களிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை நிறுவனங்கள் நடுநிலையாக நடத்தப்படுவதையும் உறுதி செய்யும் என்று இரண்டாவது நிதி அமைச்சர், டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில், 2024 ESG மாநாட்டில் கலந்துரையாடல் அங்கத்தின்போது அமிர் அம்சா அவ்வாறு தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிப்பதை தவிர்ப்பதோடு, உள்நாட்டினருக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே அந்நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)