புத்ராஜெயா, 12 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, ஜகார்த்தாவிற்குப் பயணம் மேற்கொள்ள தமது கடப்பிதழை தற்காலிகமாக விடுவிக்கும்படி மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக்கின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
நாளை முதல் நவம்பர் 18-ம் தேதி வரை ஜாகர்த்தாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கடப்பிதழை விடுவிக்கும்படிகோரினார்.
சைட் சாடிக்கின் விண்ணப்பத்திற்கு அரசு தரப்பில் இருந்து எவ்வித சிக்கலுமில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் ஹபிப் அலி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சே ரூசிமா கஷாலி விண்ணப்பத்தை ஏற்று கொண்டு கடப்பிதழை விடுவிக்க அனுமதி வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)