லண்டன், 12 நவம்பர் (பெர்னாமா) -- மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து ரூட் வென் நிஸ்டெல்ரோய் விடைபெற்றுக்கொண்டிருக்கின்றார்.
அவருடன். உதவி பயிற்சியாளர்களான ரெனே ஹேக், ஜெல்லே டென் ரவுவலார் மற்றும் பீட்டர் மோரல் ஆகியோரும் கிளப்பை விட்டு வெளியேறினர்.
முன்னாள் நிர்வாகி, எரிக் டென் ஹாக்கின் உதவியாளராக ஈராண்டு ஒப்பந்தத்தில் அவர் கடந்த ஜூலை மாதம் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு திரும்பினார்.
இடைக்கால நிர்வாகியாக, அக்கிளப்பை அவர் சிறந்த வழியில் கொண்டு வந்தார்.
நிஸ்டெல்ரோய் நிர்வாகத்தின் கீழ் இதுவரை எம்.யூ மூன்று ஆட்டங்களில் வெற்றியும், ஒரு சமநிலை முடிவையும் எதிர்கொண்டுள்ளது.
அக்கிளப்பின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரரான நிஸ்டெல்ரோய், வரும் காலத்தில் அதற்கு நிர்வாகியாக பொறுப்பேற்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)