கோலாலம்பூர், 06 நவம்பர் (பெர்னாமா) -- மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சுகாதார நலத்திட்டத்தை மலேசிய நாடாளுமன்றம் இன்று அமல்படுத்தியதாக டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
அதில், சுகாதார அமைச்சின் கீழ் Wellness on Wheel (WoW) அல்லது நடமாடும் சேவை, War on Sugar திட்டம், 1000 Days of Life போன்ற திட்டங்களும் அடங்கும்.
"சீனி மீதான போர் எனும் திட்டத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் சீனி இல்லாத பானம் வழங்கப்படும். அதோடு, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒவ்வொரு நாளும் தள்ளுபடி வழங்குகிறது. நீங்கள் சீனி எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு 20 சென் கழிவு வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
இன்று, நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டான் ஶ்ரீ ஜொஹாரி அவ்வாறு கூறினார்.
மலேசிய நாடாளுமன்ற சிகிச்சையகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)