பெய்ஜிங், 07 நவம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டில் ஆசியானுக்கு தலைமையேற்கும் பொறுப்பிற்கு மலேசியா தயாராகி வரும் நிலையில் அப்பதவியின் சுமைப்பளுவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கு உணர்ந்துள்ளார்.
“உள்ளடக்கம் மற்றும் நீடிப்புத்தன்மை” எனும் கருப்பொருளுடன், அனைத்து உறுப்பு நாடுகளும், அளவு அல்லது பொருளாதாரத் திறனைப் பொருட்படுத்தாமல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் பலன்களை சமமாகப் பங்குகொள்ளும் ஓர் ஆசியான் அமைப்பை அன்வார் கற்பனை செய்திருக்கிறார்.
67 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை வசிக்கும் வட்டாரமாக உருவாகியிருக்கும் ஆசியான், 3.8 லட்சம்கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருக்கும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது.
இன்று, சீனா, பெய்ஜிங்கில் உள்ள பெக்கிங் பல்கலைக்கழகத்தில், Bridging Futures: Strengthening Malaysia-China Relations and ASEAN Centrality என்ற தலைப்பில் பொது உரை ஆற்றியபோது அன்வார் அதனைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மலேசியர்கள் உட்பட சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசியான்-சீனா உறவுகளில், புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்காக அவர்கள் பகிர்ந்துக் கொண்ட உறுதிப்பாடும் பிரதிபலிப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]