மூவார், 07 நவம்பர் (பெர்னாமா) -- ஹ லோங் எனப்படும் சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அறுவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
26-இல் இருந்து 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை மணி 4.30-க்கு கைது செய்யப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.
அந்நிய நாட்டவர்கள் குறிப்பாக வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களைக் குறி வைத்து, சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மூவார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களும் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக ராயிஸ் முக்லிஸ் விவரித்தார்.
கடன் தொகைக்கு ஏற்ப வட்டித் தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இக்கைது நடவடிக்கையில் ரி.ம. 176,250 உட்பட 187 வங்கி அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேல் விசாரணைக்காக அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)