புத்ராஜெயா, 07 நவம்பர் (பெர்னாமா) -- தேசிய கருவூலம் மற்றும் Permodalan Nasional, PNB ஆகியவை எதிர்கொண்டிருக்கும் இழப்பு தொடர்பில், Fashion Valet ஆடை அலங்கார நிறுவனத்தின் தோற்றுநர்களான தம்பதியரிடம் இன்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அத்தம்பதியை ஏற்றி வந்த வாகனம் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தை மாலை மணி 2.34-க்கு வந்தடைந்தது.
இன்று மூன்றாவது நாளாக அத்தம்பதியிடமிருந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
நான்கு கோடியே 39 லட்சம் ரிங்கிட் முதலீட்டு இழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு அத்தம்பதியினர் அழைக்கப்பட்டதை, பெர்னாமா தொடர்புகொண்டபோது எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி முன்னதாக உறுதிபடுத்தினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]