பொது

இயக்குநர் பதவியில் இருந்து விலகினார் எடு காஸ்பர்

05/11/2024 07:34 PM

லண்டன், 05 நவம்பர் (பெர்னாமா) -- ஆர்செனல் கிளப்பில் விளையாட்டு இயக்குநரான எடு காஸ்பர் அப்பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்று காலை அறிவித்துள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஆர்செனலின் மறுமலர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பிறகு, "ஒரு புதிய தேடலை முன்னிறுத்தி" எடு எமிரேட்ஸை விட்டு வெளியேறினார்.

2003/2004 பருவத்தில், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை அர்செனல் வெல்வதற்கு அவர் முக்கிய தூணாக விளங்கினார்.

பின்னர் 2019 இல் அக்கிளப்பின் முதல் தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

46 வயதான மைக்கேல் ஆர்டெட்டாவை அர்செனல் நிர்வாகியாக நியமிப்பதில் எடு காஸ்பர் முக்கிய பங்கு வகித்தார்.

கொரிந்தியன்ஸ் கிளப்பில், விளையாட்டு இயக்குநராகப் பணியாற்றி, பிரேசிலிய தேசிய அணியில் இதேபோன்ற பங்கை வகித்த பிறகு, எடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்குத் திரும்பினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)