விளையாட்டு

அனைத்துலக நட்புமுறை ஆட்டங்களுக்கு ஆறு புதிய ஆட்டக்காரர்கள் அழைப்பு

06/11/2024 07:42 PM

கோலாலம்பூர், நவம்பர் 6 (பெர்னாமா) -- இம்மாதம் நடைபெறவிருக்கும் இரண்டு அனைத்துலக நட்புமுறை ஆட்டங்களுக்காக தேசிய காற்பந்து அணி, ஹரிமாவ் மலாயாவின் தலைமை பயிற்றுனர் பாவ் மார்டி விசேந்தே ஆறு புதிய ஆட்டக்காரர்களை மைய பயிற்சிக்கு அழைத்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நட்புமுறை ஆட்டங்களில் ஹரிமாவ் மலாயா, லாவோஸ் மற்றும் இந்தியாவை சந்திக்கவிருக்கிறது.

பேரா எப்.சி கோல் காவலர் ஹாசிக் பஸ்சில்,  திரெங்கானு எப்.சி கிளப்பின் உபைதுல்லா ஷம்சுல் பசிலி, சிலாங்கூர் எப்.சி கிளப்பின் முக்ஹைரி அஜ்மால் மஹாடி மற்றும் ஶ்ரீ பஹாங் எப்.சி கிளப்பின் ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ ஆகியோர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஜேடிதி கிளப்பின் மத்திய திடல் ஆட்டக்காரர் நாட்சோ இன்சா மற்றும் புரிராம் யுனைடெட் கேப்டன் டியான் கூல்சும் மைய பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் நியூ சிலாந்தின் ஆக்லான்ட் நகரில் நடைபெற்ற பயிற்சியின்போது அழைத்து செல்லப்பட்ட 26 ஆட்டக்காரர்களில், 20 ஆட்டக்காரர்களை பாவ் மார்டி மீண்டும் அழைத்திருக்கிறார்.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)