வாஷிங்டன், 08 நவம்பர் (பெர்னாமா) -- அதிபருக்கான அதிகார மாற்றம் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அதிகார மாற்றம் குறித்து தாம் அவருடன் கலந்துரையாடியதாக ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், அந்நாட்டின் தேர்தல் முறை சிறப்பாகச் செயலாற்றி வருவதை நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், துணை அதிபர் கமலா ஹாரிசின் தோல்வியைக் கட்சி உறுப்பினர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பைடன் கேட்டுக் கொண்டார்.
அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறுவதையே அமெரிக்க மக்களும் விரும்புவர் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப் அதிபராகப் பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)