இக்சான், 08 நவம்பர் (பெர்னாமா) -- கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு நாட்டின் ஆடவர் இரட்டையர்களான ஆரோன் சியா - சோ வோய் தேர்வாகியிருக்கின்றனர்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உபரசரணை நாட்டின் கிம் ஜே ஹியோன் - லீ சங் வோன் ஜோடியுடன் விளையாடிய அவர்கள் எளிதாக வெற்றி பெற்றனர்.
முதல் செட்டில் 21-17 என்ற புள்ளிகளில் வென்ற எரோன் - வோன் யிக் ஜோடி, இரண்டாம் செட்டிலும் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
கொரிய விளையாட்டாளர்களை செய்த தவற்றினால், இரண்டாம் செட்டில் 21-12 என்ற புள்ளிகளில் வென்று, 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோன் சியா - சோ வோய் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் 33 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
அரையிறுதி ஆட்டத்தில், ஆரோன் சியா - சோ வோய், தைவானைச் சேர்ந்த சியு சியாங் சியே - வாங் சீ லின் ஜோடியுடன் விளையாடவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)