கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- 2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 55,300 பேராகக் குறைந்துள்ளது.
மொத்த எண்ணிக்கையில் இது 3.2 விழுக்காடு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹமட் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு கண்டு வருவதால், வேலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சிறுதொழில் வணிகத்தில் தற்போது பலர் ஆர்வம் காட்டி வருவதால், அதுவும் வேலையில்லாதோரின் விகிதம் குறைவதற்கு காரணமாக அமைவதாகவும் முஹமட் உசிர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)