கோலாலம்பூர், 09 நவம்பர் (பெர்னாமா) -- பெரும்பாலான வர்த்தகர்கள் அதிகபட்ச விலைச் சட்டத்தைப் பின்பற்றியதன் வழி 2024ஆம் ஆண்டு தீபாவளி பெருநாளுக்கான அதிகபட்ச விலைத் திட்டம் சுமூகமாக செயல்பட்டது.
2024ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அதிகபட்ச விலைத் திட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வணிக தளங்களில் சுமார் மூவாயிரத்து 887 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உற்பத்தி தளங்கள் மீது 61 சோதனை நடவடிக்கைகளும் சிறு வணிக தளங்கள் மீது 3,826 சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
இருப்பினும், இத்திடத்தை மேற்கொள்ளும்போது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு எந்தவொரு புகாரையும் பெறவில்லை.
மக்கள் குறிப்பாக தீபாவளி கொண்டாடும் இந்தியர்களின் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாக, 2024 அதிகபட்ச விலைத் திட்டம் தீபாவளி கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது.
இத்திட்ட அமலாக்கத்திற்கு, அதிகபட்ச விலைகளுடன் கூடிய எட்டு வகையான விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அரசாங்கப் பதிவேட்டின்படி வெளியிடப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)